நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உருவாகிறது தி கிரே மேன் இரண்டாம் பாகம் - தனுஷ் பகிர்ந்த தகவல்

தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதன் இயக்குநர்களான ருசோ பிரதர்ஸ் அறிவித்துள்ளனர். 

News image
Updated On :27 ஜூலை 2022, 10:05 am

DIN

தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதன் இயக்குநர்களான ருசோ பிரதர்ஸ் அறிவித்துள்ளனர். 

ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான தி கிரே மேன் ஆங்கில படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

ரியான் கோஸ்லிங், கிரிஸ் இவன்ஸ், அனா தி அர்மாஸ் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இந்தியாவில் விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் ருசோ பிரதர்ஸுடன் தனுஷ் பங்கேற்றார். 

அப்போது தனுஷ் கதாப்பாத்திரத்தை அடுத்தடுத்த படங்களில் விரிவாக பயன்படுத்துவேன் என்று ருசோ பிரதர்ஸ் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக ருசோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர். தனுஷ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.