செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் பட சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.
மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க| பிரபு தேவாவுடன் இணையும் பாக்யலட்சுமி நாயகி
ஓம் பிரகாஷ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை தனுஷின் பிறந்தநாள் என்பதால் இந்தப் படத்திலிருந்து சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். முன் அறிவிப்பின்றி வெளியான இந்தப் போஸ்டர் தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


