தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிடும் விளையாட்டு பிரபலங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலை விளையாட்டு பிரபலங்கள் இன்று மாலை வெளியிடுகின்றனர். 

News image
Updated On :31 ஜூலை 2022, 1:17 pm

DIN

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலை விளையாட்டு பிரபலங்கள் இன்று மாலை வெளியிடுகின்றனர். 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் இன்று (ஜூலை 31) வெளியாகவிருக்கிறது. 

இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல் வெளியாகவுள்ளது. 

இந்தப் பாடலானது சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ என்ற வணிக வளாகத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படவிருக்கிறது. நிகழ்வில் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் பங்கேற்கவிருக்கின்றனர். 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலை விளையாட்டு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளனர். அதன்படி தமிழில் அஸ்வினும், மலையாளத்தில் சஞ்சு சாம்சனும், தெலுங்கில் பி.வி.சிந்துவும் வெளியிடுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.