இதற்காகவா திருப்பதியை வேண்டாமென்றார் நயன்தாரா? பரவும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் பல்வேறு காரணங்களால் நட்சத்திர ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்காகவா திருப்பதியை வேண்டாமென்றார் நயன்தாரா? பரவும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
இதற்காகவா திருப்பதியை வேண்டாமென்றார் நயன்தாரா? பரவும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பல்வேறு காரணங்களால் நட்சத்திர ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வெறும் பணத்துக்காகத்தான் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை திருப்பதியில் நடத்தாமல் மகாபலிபுரத்தில் நடத்த முடிவு செய்ததாக தகவல்கள் கசிந்திருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இவ்விரு நட்சத்திரங்களின் திருமணத்தை திருப்பதியில் நடத்த அனுமதி அளிப்பதில் சில சிக்கல்களை திருப்பதி தேவஸ்தானம் எதிர்கொண்டது.

அதனால், திருப்பதியில் நடைபெறவிருந்த திருமணம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு மகாபலிபுரத்தில் நடைபெறவிருப்பதாக முதலில் கூறப்பட்டது.

இது, நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் கசிந்ததன் மூலம் இந்த தகவல் ஊடகங்களில் பரவியது.

அதாவது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக 150 பேர் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரப்பட்டதாகவும் இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி கொடுப்பது என்பது இயலாது. ஏனெனில் அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. கோயிலுக்குள் நடைபெறும் திருமணத்துக்கு சுமார் 10 பேருக்கும் குறைவானவர்களுக்கே அனுமதி அளிக்கும்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் ஏற்கனவே கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே இப்படி ஒரு நட்சத்திரங்களின் திருமணம் என்றால், அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், திருப்பதியில் நடைபெறவிருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டதில், வேறு பல காரணங்கள் இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விடியோவை பிரபல ஓடிடி தளத்துக்கு விற்பனை செய்ய நயன்தாரா விலை பேசியிருப்பதாகவும் இதற்காகக் கூட திருப்பதியில் நடைபெறவிருந்த திருமணத்தை மாற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பு விளக்கம் அளித்தால்தான் உண்மை தெரியவரும்.

பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விடியோவை வாங்குவதும், முதன் முறையாக தமிழ் திரைப்பட நடிகையின் திருமண விடியோவை ஒரு ஓடிடி நிறுவனம் இவ்வாறு வாங்குவதும் குறிப்பிடத்தக்கதாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com