/

நானியின் ‘அன்டே சுந்தரனிகி’ படத்தின் ட்ரைலர் வெளியானது

நானி, நஸ்ரியா நடித்த ‘அன்டே சுந்தரனிகி' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

News image

படம் : டிவிட்டர் | நானி

Updated On :3 ஜூன் 2022, 9:28 am

தெலுங்கு நடிகர் நானி, நஸ்ரியா பகத் நடித்த ‘அன்டே சுந்தரனிகி' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
‘மெண்டல் மதிலோ’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா பகத், நதியா, ஹர்ஸவரதன், ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். 

தமிழில் இந்தப் படத்தின் பெயர் ‘அடடே சுந்தரா’ மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’.இந்தப் படம் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வழக்கமான காதல் கதையாக இருன்ந்தாலும் இருவரின் நடிப்பும் ரசிக்கும் படியாக இருப்பதால் படத்திற்க்கு ரசிகர்கள ஆவலாக எதிர்பார்க்கின்றனர். 

யூடியூப் டிரெண்டிக்கில் முதலிடத்தில் உள்ளதென நானி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இத்திரப்படம் ஜூன் 10இல் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.