ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஓடிடியில் யூத் எப்போது?

யூத் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

யூத் போஸ்டர் - youth production

Updated On :6 ஏப்ரல் 2026, 5:13 pm IST

நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம், சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தெலுங்கிலும் இப்படம் வெளியானது. அங்கும் இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற யூத் திரைப்படம் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படத்தின் நாயகியாக அனிஷ்மாவும் முக்கிய பாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

இந்த நிலையில், யூத் திரைப்படம் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

Summary

Information has emerged regarding the OTT release of the film Youth, starring actor Ken.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.