47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓடிடியில் ஆவணப்படமாக வெளியாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை: இயக்குநர் யார்?

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:46 am

DIN

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.

இயக்குநர் விக்‌ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர்.

நயன்தாரா - விக்‌ஷேன் சிவன் ஆகிய இருவரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்றார்கள். 

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை ஆவணப்படமாக உருவாகவுள்ளது. பிரபல ஓடிடியில் வெளியாகும் இப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.