யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம்: விக்ரம் சாதனை

கேரளத்தில் அதிக வசூலை அள்ளிய தமிழ்ப் படம் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது கமல் ஹாசன் நடித்த விக்ரம் படம்.

News image
Updated On :8 ஜூன் 2022, 10:19 am

DIN

கேரளத்தில் அதிக வசூலை அள்ளிய தமிழ்ப் படம் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது கமல் ஹாசன் நடித்த விக்ரம் படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கேரளத்தில் இந்தப் படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. வார இறுதி நாள்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) ரூ. 15.72 கோடி வசூலித்த விக்ரம் படம், கடந்த இரு நாள்களில் மேலும் ரூ. 6.57 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் முதல் ஐந்து நாள்களில் கேரளாவில் மட்டும் ரூ. 22.29 கோடி வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கேரளத்தில் அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்கிற பெருமையை விக்ரம் படம் அடைந்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பு பலமாக இருப்பதால் கேரளாவில் இன்னும் கூடுதல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.