யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் மெடிக்கல் மிராக்கல் படத்தில் அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார்.
சந்தானம் நடிப்பில் ஏ1, பாரிஸ் ஜெயராஜ் படங்களை இயக்கிய ஜான்சன் அடுத்ததாக இயக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு மெடிக்கல் மிராக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் ஜான்சன் தயாரிக்கிறார். மெடிக்கல் மிராக்கல் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஏற்கனவே ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், வினோத், பாலா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்கு இசையமைத்த, சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
மணிகண்ட ராஜா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இந்தப் படத்தில் அரசியலை மையப்படுத்திய நகைச்சுவைப் படமாக உருவாக உள்ளது. யோகிபாபு நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் ஜான்சன் இயக்கிய ஏ1 திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. பாரிஸ் ஜெயராஜ் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக மெடிக்கல் மிராக்கல் திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


