கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நீ நதி போலே ஓடிக்கொண்டிரு! விஜய் சொன்ன குட்டிக்கதை விடியோவாக...

'மாஸ்டர்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய் மேடையில் பகிர்ந்த குட்டிக் கதை அனிமேஷன் விடியோவாக வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2022, 2:35 am

DIN


'மாஸ்டர்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய் மேடையில் பகிர்ந்த குட்டிக் கதை அனிமேஷன் விடியோவாக வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் விஜய் சொன்ன குட்டிக் கதையை, அவரது பிறந்தநாளையொட்டி அனிமேஷன் விடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த விடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவுள்ள விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் நலத் திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரது புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Story image

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய் நதியை மையமாக வைத்து குட்டிக் கதையை பகிர்ந்துகொண்டார். இந்த கதையை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அனிமேஷன் விடியோவாக மாற்றி வெளியிட்டுள்ளது.

Story image

விஜய் குரலில் ஒவ்வொரு வரிக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் விடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.