பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா - ஜோதிகா

சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்களது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக வெளியிடுகின்றனர். 

News image
Updated On :24 ஜூன் 2022, 6:16 pm IST

சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்களது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக வெளியிடுகின்றனர். 

சாய் பல்லவி தற்போது கார்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தை பிளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் ஃபுட் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படத்தை தற்போது சூர்யா - ஜோதிகா இணைந்து தங்களது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகின்றனர். 

கார்கி படத்தில் சாய் பல்லவியுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, காளி வெங்கட்,  கலேஷ் ராமானந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''நானும் ஜோதிகாவும் கார்கி படத்தில் இணைவது மகிழ்ச்சி. சில கதாப்பாத்திரங்கள் மனதிலேயே தங்கவிடும். புதிய எண்ணங்களும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.