வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

‘நானே வருவேன்’ திரைப்பட போஸ்டர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை வெளியானது.

News image
‘நானே வருவேன்’ திரைப்பட போஸ்டர் வெளியீடு
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை வெளியானது.

'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரானது ரசிகர்களின் வெகுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நானே வருவேன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.