புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

''என் புருஷன் பண்ணது தப்பு...'' : குஷ்பு நடித்துவரும் மீரா தொடரின் ப்ரமோ விடியோ இதோ

குஷ்பு நடித்து வரும் மீரா தொடரின் ப்ரமோ விடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

News image
Updated On :5 மார்ச் 2022, 6:13 am

DIN

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை குஷ்பு, மீரா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தத் தொடர் விரைவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

இந்தத் தொடருக்கு நடிகை குஷ்பு முதன்முறையாக கதை எழுதியுள்ளார். இந்தத் தொடரில் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகரான சுரேஷ் மேனன் குஷ்புவின் கணவராக நடித்துள்ளார். 

தற்போது இந்தத் தொடரின் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் குஷ்பு, தனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார். அப்போது குஷ்பு, தனது கணவரிடம், எங்களுடன் நீங்கள் நேரம் செலவிடுவதில்லை. மருத்துவமனையில் எதாவது பிரச்னையென்றால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூற அதற்கு சுரேஷ் மேனன் அவரை அடித்துவிடுகிறார். 

பின்னர் கேமராவைப் பார்த்து பேசும் குஷ்பு, இந்த மாதிரி பல பெண்கள் தேவையில்லாமல் கணவரிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு என் புருஷன் செய்தது தப்பு. அதுவும் என் குழந்தைகள் முன்பு என்னை அடித்தது மிகவும் தவறானது என்கிறார். இந்த ப்ரமோ மீரா தொடரானது கணவர் - மனைவிக்கு இடையேயான பிரச்னையை பேசும் தொடர் என்பதை உணர்த்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.