''இப்போ நீ ரெண்டாவதுதான்'': திருமண நாளில் சாயிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யா

ஆர்யாவும் சாயிஷாவும் 3 ஆம் ஆண்டு திருமண தினத்தை கொண்டாடுகின்றனர்.  
''இப்போ நீ ரெண்டாவதுதான்'': திருமண நாளில் சாயிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யா
Published on
Updated on
2 min read


கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் காதலிக்கத் தொடங்கினர். இருவரது காதல் குறித்து செய்திகள் வெளியானாலும் இருவரும் மௌனம் காத்து வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்று அறிவித்தார். 

இதனையடுத்து இருவருக்கும் அந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இருவரும் 3 ஆம் ஆண்டு திருமண தினத்தை கொண்டாடுகின்றனர். 

இந்த நிலையில் ஆர்யா தனது மனைவி சாயிஷாவுக்கு வாழ்த்து சொல்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இந்த உலகின் சிறந்த துணைக்கு 3 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள். என்னை கவனித்துக்கொள்வதற்கும், ஆதரவளிப்பதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும், நேசிப்பதற்கும் நன்றி (நீ இப்பொழுது 2வதுதான்)'' என்று குறிப்பிட்டுள்ளார். 

சாயிஷா தனது பதிவில், ''எப்பொழுதும் நான் நேசிக்கும், மரியாதை அளிக்கும், அன்பு செலுத்தும் மனிதருக்கு திருமண நாள் வாழ்த்துகள். உலகின் சிறந்த கணவராக, சிறந்த தந்தையாக இருப்பதற்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com