'பீஸ்ட்' பாடலான ஜாலியோ ஜிம்கானாவுக்கு உண்மையான அர்த்தம் இதுவா ?

பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா பாடல்குறித்து பாடலாசிரியரின் பேட்டி வைரலாகி வருகிறது. 
'பீஸ்ட்' பாடலான ஜாலியோ ஜிம்கானாவுக்கு உண்மையான அர்த்தம் இதுவா ?

'பீஸ்ட்' படத்திலிருந்து 'ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடலின் ப்ரமோ விடியோ நேற்று (மார்ச் 16) மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில் கு.கார்த்திக் எழுதியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். 

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான அரபிக் குத்து பாடல் ஒரு மாதத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் டிரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜாலியோ ஜிம்கானா முழு பாடலும் வருகிற மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் தனியார் யூடியூப் பக்கத்துக்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவரிடம் ஜாலியோ ஜிம்கானா என்ற வரிக்கு அர்த்தம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''என்ன நடந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம்'' என்று குறிப்பிட்டார். 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ், பிஜோர்னோ, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்தப் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. டாக்டர் படத்தைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com