நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜல்லிக்கட்டு காளையுடன் சூர்யா: 'வாடிவாசல்' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்

வாடிவாசல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

News image
Updated On :22 மார்ச் 2022, 7:58 am

DIN

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து நடிக்கவிருக்கும் 'வாடிவாசல்' படத்தின் ஒத்திகைக்கான படப்பிடிப்பு தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தை எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி, ஜெய் பீம் படத்தில் வில்லனாக நடித்த தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகர் கருணாஸ் இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரியவிருக்கிறார்.

Story image
Story image
Story image

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா காளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.

தற்போது நடிகர் சூர்யா, பாலா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படபிப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் வெற்றிமாறனும் தற்போது 'விடுதலை' படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.