''நானும் சாதாரண மனிதன்தான் எனக்கும் கோவம் வரும்'': நடிகர் விஜய்யின் பதிலால் ஆச்சரியமடைந்த நடிகர்
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள ஷைன் டாம் சக்கோ விஜய் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்திலிருந்து 'அரபிக் குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
'பீஸ்ட்' படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், ''பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது என் அம்மாவுடன் நடிகர் விஜய்யை சந்தித்தேன்.

அப்போது என் அம்மா நடிகர் விஜய்யிடம் நீங்கள் கோபப்படமாட்டீர்களா? எனக் கேட்டார். அதற்கு நடிகர் விஜய், நானும் சாதாரண மனிதன்தான் எனக்கும் கோபம் வரும். ஆனால் கட்டுப்படுத்திக்கொள்வேன் என்று தெரிவித்தார். கோபத்தைக் கட்டுப்படுத்த கடுமையான மன வலிமை தேவை. அது நடிகர் விஜய்யிடம் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...