மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் உரிமையைக் கைப்பற்றிய அமேசான்

பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

News image
Updated On :24 மார்ச் 2022, 7:21 am

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக மணிரத்னம்  இயக்கி வருகிறார். லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவி தேவியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகர்களின் தோற்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.