புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிக்பாஸ் அல்டிமேட்டில் 'கலக்கப்போவது யாரு' தீனா

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலக்கப்போவது யாரு தீனா கலந்துகொள்ளவிருக்கிறாராம். 

News image
Updated On :24 மார்ச் 2022, 12:38 pm

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் தீனா. பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் பலரையும் தன் குரல் மூலம் கலாய்த்துவந்தார். 

விஜய் டிவி மூலம் சினிமாவில் நுழைந்தவர்களில் தீனாவும் ஒருவர். 'கைதி', 'மாஸ்டர்' போன்ற பல படங்களில் தீனா நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்துகொள்கிறாராம். 

ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு சதீஷ் போட்டியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் வெளியேறியிருக்கிறாராம். அவருக்கு பதிலாக தீனா பிக்பாஸ் அல்டிமேட்டில் நுழையவிருக்கிறார். 

பிக்பாஸ் அல்டிமேட்டில் சுவாரசியம் குறைவாக இருக்கிறது. வார இறுதி நாட்களில் சிம்புவுடன் பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.