தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பீஸ்ட் புதிய போஸ்டர் வெளியீடு: வேற லெவல் கெட்டப்பில் விஜய்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :26 மார்ச் 2022, 7:39 am

DIN


நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி, விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புதிய கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு, பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்ததால் எழுந்த எதிர்பார்ப்பு என படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

படம் ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

பாடல் வெளியீட்டு விழா இல்லாததால், படத்தின் டீசர், டிரெய்லர் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், பட வெளியீட்டுத் தேதியுடன் புதிய போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால், 5 மொழிகளிலும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் நடிகர் விஜய்யின் புதிய கெட்டப் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளதால், சமூக ஊடகங்களில் அவை அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.