பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

'நீ கவிதைகளா... ' : ஆதியுடன் நடைபெற்ற நிச்சயதார்த்த விடியோவை பகிர்ந்த நிக்கி கல்ராணி

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி ஆகியோருக்கு கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

News image
Updated On :29 மார்ச் 2022, 11:59 am

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி ஆகியோருக்கு கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் தங்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் தங்களின் நிச்சயதார்த்த விடியோவை நிக்கி கல்ராணி பகிர்ந்துள்ளார். பின்னணியில் 'மரகத நாணயம்' படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா' பாடல் ஒலிக்கிறது. 

'நீ கவிதைகளா' ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் பாடல். ஆதி - நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்த அறிவிப்பு வந்தவுடன் ரசிகர்கள் இந்தப் பாடலை பகிர்ந்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரகத நாணயம், யாகவராயினும் நா காக்க படங்களில் நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் இணைந்து நடித்திருந்தனர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் பரவின. மேலும் நடிகர் ஆதியின் குடும்ப நிகழ்வுகளில் நிக்கி கல்ராணி கலந்துகொண்டது சலசலப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.