‘தமிழ் வாழ்க’ எனக் கூறுவது என் கடமை: கமல்ஹாசன்
மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் வாழ்க எனக் கூறுவது என் கடமை எனத் தெரிவித்துள்ளார்.


மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் வாழ்க எனக் கூறுவது என் கடமை எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம்(மே-15) நடைபெற்றது.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் மொழிப் பிரச்னை குறித்து பேசும்போது “எந்த மொழியையும் வேண்டாம் என்பது நாகரீகம் இல்லை. நீங்கள் ஹிந்தியுடன் குஜராத்தி, சைனீஷ் மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய்மொழியை விட்டுக்கொடுக்காதீர்கள். நான் எந்த மொழியையும் ஒழிக என சொல்லமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. அதற்கு யார் எதிராக நின்றாலும், எதிர்க்க வேண்டியது என் கடமை” எனத் தெரிவித்தார்.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜுன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...