கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆமிர் கான் பட டிரைலர்: நாக சைதன்யா ரசிகர்கள் வருத்தம்

நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகமாகி ஆமிர் கான் உடன்  நடித்த திரைப்படமான ‘லால் சிங் சத்தா’ ட்ரெய்லர் வெளியானது. நாக சைதன்யா டிரைலரில் மிகக் குறைவான காட்சிகளே வருவதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

News image
Updated On :30 மே 2022, 12:08 pm

DIN

நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகமாகி ஆமிர் கான் உடன்  நடித்த முதல் திரைப்படமான ‘லால் சிங் சத்தா’ ட்ரெய்லர் வெளியானது. நாக சைதன்யா டிரைலரில் மிகக் குறைவான காட்சிகளே வருவதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

ஆமிர் கான் படத்தை தயாரித்து நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) என்ற நாவலை தழுவி அதே பெயரில் வெளியான திரைப்படத்தின் ரீமேக் தான் 'லால் சிங் சத்தா'. கடந்த 2019-இல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதுல் குல்கர்னி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். இதில் ஆமிர் கான், நாக சைதன்யா, கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாருக் கான் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

‘மஜிலி' படப்புகழ் நாக சைதன்யா டிரைலரில் 3,4 காட்சிகளே வருவதால் இன்னும் கூடுதலான நேரம் திரையில் வந்திருக்க வேண்டுமென ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 11இல் வெளியாக இருக்கிறது.

படத்தின் டிரைலரைக் காண: 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.