மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘இந்திய சினிமாவின் டானுடன்’: ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அனுபவத்தை நடிகர் சிவகார்த்திகேயன் திங்கள்கிழமை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

News image
ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன்
Updated On :30 மே 2022, 7:55 am

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அனுபவத்தை நடிகர் சிவகார்த்திகேயன் திங்கள்கிழமை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்த டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்கினார். இசை - அனிருத். டாக்டர் படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார் ப்ரியங்கா மோகன். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த் போன்றோரும் டான் படத்தில் நடித்தார்கள். 

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற டான் படம் 12 நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியதாக அதிகாரபூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Story image

இந்த படத்தை பல்வேறு பிரபலங்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“இந்திய சினிமாவின் டானை சந்தித்து, அவரின் ஆசிர்வாதத்தை பெற்றேன். அந்த 60 நிமிடங்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள். டானை பற்றிய உங்கள் பாரட்டிற்கும், நேரத்தை ஒதுக்கியதிற்கும் நன்றி தலைவா” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.