யுவன் எங்கே செல்கிறார்? வைரலாகும் புதிய புகைப்படம்!
1997-ல் அரவிந்த் படத்தில் அறிமுகமான யுவன், 1999-ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ரசிகர்களை அள்ளிக்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அதன் பாடல்கள் இன்றைக்கும் கேட்கப்படுகின்றன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு யுவனின் வளர்ச்சி நம்பமுடியாத வகையில் இருந்தது. பல வெற்றிப் படங்களுக்கு இவருடைய பாடல்கள் பக்கபலமாக அமைந்தன.
தற்போது யுவனின் இசையில் பிரதீப் ரங்கனாதன் நடிப்பில் ‘லவ் டுடே’ படம் திரைக்கு வர உள்ளது.
யுவன் 2014இல் இஸ்லாம் மதத்தை தழுவினார். தனது பெயரை அப்துல் காலிக் எனவும் மாற்றினார். 2015ஆம் ஆண்டு ஷாப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் அணிந்து செல்லும் ஆடையுடன் மெக்கா புறப்பட்டுள்ளார் யுவன். அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Article
நாளை சென்னை வருகிறார் சன்னி லியோன்! எதற்காகத் தெரியுமா?
நா.முத்துக்குமார் எழுதிய ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ லிரிக்கல் விடியோ வெளியானது!
'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!
ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சி செய்யும் சமந்தா! (விடியோ)
கதிர், நரேன் நடித்த ‘யூகி’: டீசர் வெளியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.