

நடிகர் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் படங்களில் மட்டுமல்லாது பாலிவுட், மலையாளப் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தயாரான ஹிந்தி படங்களான ‘மேரி கிரிஸ்துமஸ்’, ‘மும்பைக்கார்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தை ஓடிடி வெளியீடாக டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.