இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் போஸ்டர் வெளியானது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:45 am

DIN

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் போஸ்டர் வெளியானது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க  தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என சமீபத்தில் செய்தி வெளியானது. 

Story image

இந்நிலையில் படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இதில் படத்தின் தலைப்பு ‘லால் சலாம்’ என்று இருக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை- ஏ.ஆர்.ரஹ்மான். 

மேலும் படம் 2023இல் வெளியாகுமெனவும் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாமல் படத்தின் போஸ்டர் வெளியானது. லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதிலும் மாறாத அதே தகவல்கள்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்டரில் ஹெல்மட், கிரிக்கெட் பேட் இருப்பதால் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.