போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தின் பூஜை! (படங்கள்) 

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

News image
Updated On :5 நவம்பர் 2022, 10:45 am

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

Story image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க  தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என சமீபத்தில் செய்தி வெளியானது. 

Story image

இந்நிலையில் சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோருடன் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கலந்துக் கொண்டனர். 

Story image

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும்  ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை- ஏ.ஆர்.ரஹ்மான். போஸ்டரில் ஹெல்மட், கிரிக்கெட் பேட் இருப்பதால் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

Story image

Related Article

வில்லனாக நடிக்கும் வடிவேலு?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு நிறுத்தம்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது!

சமந்தாவின் ‘யசோதா’: ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட்!

‘ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோ போடுவது எதற்கு?’- அஜித் குறித்து பிரபல விமர்சகர் தாக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.