சினிமா பாணியில் காரின் மேற்கூரையில் பயணம் செய்த பவன் கல்யாண்! (விடியோ)

சினிமா பாணியில் காரின் மேற்கூரையில் பயணம் செய்த பவன் கல்யாண்! (விடியோ)

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
Published on

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2014இல் பவன் கல்யாணால் உருவாக்கப்பட்டது. ஜனசேனா என்பதற்கு தெலுங்கு மொழியில் மக்கள் இராணுவம்.

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் சனிக்கிழமை ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்படம் எனும் கிராமத்தை எப்படி அடைந்தார் என்ற விடியோ வைரலாகி வருகிறது. பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்திருப்பதை அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஓடும் காரின் ஓரத்தில் தொங்குவதைக் காணலாம். பவன் கல்யாணின் பின்னால் இருந்த காரில் மேலே அமர்ந்து பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் இருந்தனர். ஆதரவாளர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றனர். மேலும் ஒருவர் காரில் தொங்கிக்கொண்டு அவரை விடியோ எடுத்துக்கொண்டு சென்றார். 

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பிரபலமனது. அவரது ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றது. ஆனால் அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவது குறித்து பலர் கேள்வி எழுப்பினர். 

அரசாங்கத்தின் இடிப்பு இயக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை பவன் கல்யாண் சந்தித்ததை பிரத்யேக ட்ரோன் காட்சிகள் மூலம் படம்பிடித்துள்ளனர். பவன் கல்யாணின் கார் மங்கல்கிரியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டதால் வீடுகள் மற்றும் கடைகளை இழந்தவர்களை பவன் கல்யாண்  சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com