‘மாவீரன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளார்.
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியதைத் தொடர்ந்து அவர் அடுத்து நடித்து வரும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | டிவிட்டர் ‘ப்ளூ டிக்’: எலான் மாஸ்க்குக்கு கங்கனா சொன்ன யோசனை!
சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் தனது படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் வைக்க வேண்டுமென இயக்குநர் மடோன் அஸ்வினுடன் கூறியதாகவும், இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மழைக் காரணமாகவே நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ள அதிதி ஷங்கர், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதிதியின் இந்த பதிவை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டிலேயே ஊழல்மிக்கவா் அஸ்ஸாம் முதல்வா்: ராகுல் காந்தி பிரசாரம்!

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு

மாநில அந்தஸ்து: ரங்கசாமியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்! - காங்கிரஸ் தலைவா்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


