நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2022, 2:28 pm

DIN

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

இதுவரை இப்படம் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதால்  திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்கபூரிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.