சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

’பிரின்ஸ் தோல்விக்கு அவர்தான் காரணம்..’: தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்விக்கான காரணத்தை  தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2022, 9:11 am

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்விக்கான காரணத்தை  தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்விப் படமாகவும் அமைந்தது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் “ஒரு படத்தின் வெற்றிக்கு நல்ல கதை முக்கியம். படம் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குநர்கள்தான் காரணம். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தோல்வியடைந்ததற்கு அப்படத்தின் இயக்குநரே காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.