பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சமந்தாவின் சண்டைப் பயிற்சி விடியோவை பாராட்டிய பிரபல இயக்குநர்!

யசோதா படத்திற்காக நடிகை சமந்தா செய்யும் சண்டைப் பயிற்சி விடியோ வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

News image
Updated On :14 நவம்பர் 2022, 1:06 pm

DIN

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம்,  நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்த விடியோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Story image

3 நாளில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்தாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்திற்காக சண்டைப் பயிற்சி செய்யும் சமந்தாவின் விடியோ வெளியாகியுள்ளது. இதற்கு இயக்குநர் அட்லி ‘மாஸ்’ என கமெண்ட் செய்துள்ளார். 

அட்லி இயக்கத்தில் சமந்தா தெறி படத்தில் நடித்து இருந்தார். அட்லி தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து படமெடுத்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.