படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய ஜோதிகா- மம்மூட்டி!
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. அவரது பிறந்தநாளன்று பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. படத்திற்கு ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மம்மூட்டி நடிக்க வேண்டிய பகுதிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினருக்கு உணவு பரிமாறியுள்ளார். இவருடன் சேர்ந்து நடிகை ஜோதிகாவும் உணவு பரிமாறியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் மம்மூட்டி துடிப்பான குழுவுடன் வேலை செய்தது மகிழ்வளிக்கிறதென தெரிவித்துள்ளார்.
Related Article
சினிமாவில் எதுவுமே செய்யாமல் நடிகர்கள், நடிகைகள் புகழை எடுத்துக் கொள்கிறார்கள்: பிரியங்கா சோப்ரா
ஆமிர் கான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!
கோமாளி, லவ் டுடே: இதில் எது சிறந்த படம்? -‘லவ் டுடே’ கதாநாயகியின் சுவாரசிய பதில்!
ரசிகர்களுக்கு க்யூட்டாக வேண்டுகோள் விடுத்த கயல் ஆனந்தி! (விடியோ)
துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமம், ஓடிடி உரிமம் யாருக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.