தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2022, 8:07 am

DIN

அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 

பிறகு இயக்குநர் பொறுப்பை தியாகராஜனே ஏற்றுக்கொண்டார். அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ரவி யாதவ், வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர். 

நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை சிம்ரன் தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.