பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சினிமா உதவி ஒளிப்பதிவாளா் தற்கொலை

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் திரைப்பட உதவி ஒளிப்பதிவாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
கோப்புப்படம்
Updated On :22 நவம்பர் 2022, 7:59 pm

DIN

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் திரைப்பட உதவி ஒளிப்பதிவாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதனந்தபுரம் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் விக்னேஷ் (22). இவா் திரைப்படத் துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனது அறைக்குள் சென்றவா் வெளியே வரவில்லை. இதனால் அவரது உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்த போது விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்து மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசாா் விக்னேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் கடந்த சில மாதங்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.