பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக்கும் சுதா கொங்காரா?

இயக்குநர் சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:56 am

DIN

இயக்குநர் சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, ஊர்வசி, அபர்னா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் 2020 நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று. 

இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பையும் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தை இயக்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்குவதாக தெரிவித்திருந்த நிலையில், அப்படம் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.