தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ வெளியீடு எப்போது? தகவல்

நடிகர் வடிவேலுவின்  புதிய படமான  ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின்  வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2022, 5:15 am

நடிகர் வடிவேலுவின்  புதிய படமான  ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின்  வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் பட கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. 

நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதிஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். 

Story image

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையைப் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்திலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.