கார்த்திக்கு மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா.. எந்தப் படத்துக்கு?

 நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திக்கு மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா.. எந்தப் படத்துக்கு?

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. 

பாலிவுட்டிலும் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த ‘குட் பை’ திரைப்படம் வருகிற அக்.7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மேலும் தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நடிகர் கார்த்தி இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் விரைவில் நடிக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ‘சுல்தான்’ படத்தில் கார்த்தியின் ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com