அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நம்ம வந்தியத்தேவன் பாடிய பாடல் - ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி பாடிய பாடல் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். 

News image
Updated On :7 அக்டோபர் 2022, 11:24 am

DIN

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் அதிகம் பேரால் விரும்பப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் வந்தியத்தேவன். பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க முடிவுசெய்யப்பட்ட போது எம்ஜிஆர் துவங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரும் ஏற்க விரும்பிய வேடம் வந்தியத்தேவன் கதாப்பாத்திரமே. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

காதல், வீரம், நட்பு, நகைச்சுவை என பல பரிமாணங்கள் கொண்ட கதாப்பாத்திரத்தை நடிகர் கார்த்தி மிக சிறப்பாக கையாண்டார். பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் சர்தார் படத்தின் மீதான எதிர்பாப்ப்பு இப்பொழுதே அதிகரித்துள்ளது. 

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிததுள்ளனர். சர்தார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, ஏறு மயிலேறி என்ற பாடலை பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.