இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காதலியுடன் காளிதாஸ் ஜெயராம் - பிரபல நடிகைகள் வாழ்த்து

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.  

News image
Updated On :8 அக்டோபர் 2022, 11:21 am


நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். 

பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார், 

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  மாடலும் நடிகையுமான தாரணி காளிங்கராயருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார். 

Story image

இதனையடுத்து இருவருக்கும் நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், காயத்ரி, நமிதா, சஞ்சனா நடராஜன், அபர்ணா பாலமுரளி மற்றும் காளிதாஸின் சகோதரி மாளவிகா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 

Story image

முன்னதாக ஓணம் பண்டிகையின்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்திலும் தாரணி உடனிருந்தார். அப்போதே காளிதாஸும் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.