மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ரஜினியின் வாழ்த்து, விஜய்யின் விருந்து, அனிருத்துடன் பார்ட்டி - நினைவுகளைப் பகிர்ந்த ஷாருக்கான்

ரஜினிகாந்த், விஜய், அனிருத் ஆகியோருடனான சந்திப்பு குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

News image
Updated On :8 அக்டோபர் 2022, 6:15 am

DIN

ரஜினிகாந்த், விஜய், அனிருத் ஆகியோருடனான சந்திப்பு குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். 

கடந்த 30 நாட்களாக சென்னையில் நடைபெற்றுவந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த நிலையில் படப்பிடிப்பு நாட்களில் தனக்கு கிடைத்த அனுபவங்களை நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் குழுவுக்கு சிறப்பான 30 நாட்கள். தலைவர் (ரஜினிகாந்த்) எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து வாழ்த்தினார். நயன்தாராவுடன் படம் பார்த்தேன். அனிருத்துடன் பார்ட்டி செய்தேன். விஜய் சேதுபதியுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டேன். தளபதி விஜய் சுவையான உணவளித்தார். சிறப்பான கவனிப்புக்காக இயக்குநர் அட்லி மற்றும் பிரியாவுக்கு என் நன்றி. தற்போது நான் சிக்கன் 65 செய்ய கற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இயக்குநர் அட்லியின் பிறந்தநாளின் போது ஷாருக்கான் - அட்லி - விஜய் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.