ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கே.ஜி.எஃப் இயக்குநரின் ‘சலார்’: பிருத்விராஜ் பிறந்தநாளில் புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் பிருத்விராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் ’சலார்‘ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :16 அக்டோபர் 2022, 6:32 am

DIN

நடிகர் பிருத்விராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் ’சலார்‘ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை  நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். 

‘சலார்’ 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹொம்பலே ஃபிலிம்ஸ்’ அறிவித்திருந்தது. 

இந்நிலையில் பிருத்விராஜ் பிறந்தநாளில் அவர் இடம்பெற்றுள்ள சலார் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரதராஜ மன்னார் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.