காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'விக்ரம்' படம் பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது - அப்படி என்ன செய்தார் ?

கமல்ஹாசன் விக்ரம் படத்தை பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 11:08 am

DIN

கமல்ஹாசன் விக்ரம் படத்தை பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசனின் விக்ரம் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இன்னும் சில  திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 என இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கிறது. 

அந்த அளவுக்கு 'விக்ரம்' ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் விக்ரம் படத்தை திரையரங்குகளில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை பார்த்தது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படம் பார்த்த ரசிகர் ஒருவருக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது. 

உதய பாரதி என்ற அந்த ரசிகர் விக்ரம் படத்தை திரையரங்குகளில் 50 முறை பார்த்திருக்கிறார். இதனையடுத்து லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு பதக்கமும், சான்றிதழமும் அளித்து கௌரவித்துள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் உதய பாரதிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.