அதிக பின்தொடர்பாளர்கள்: நடிகர் தனுஷ் முதலிடம்!
அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.


அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் உலகின் பல்வேறு துறை பிரபலங்களும் உள்ளனர். பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை பகிரும் இடமாகவும் இத்தளம் உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷை டிவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.10 கோடியாக (11 மில்லியன்) உயர்ந்துள்ளது.
இதனால், தமிழ் சினிமாவில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட முதல் நடிகர் மற்றும் தென்னிந்திய அளவில் 2-வது நடிகர் என்கிற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.
இப்பட்டியலில் மகேஷ்பாபு 1.28 கோடி(12.8 மில்லியன்) பின்தொடர்பாளர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்தில், வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிற தனுஷ் ரசிகர்கள் இச்செய்தியையும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...