நடிகர் வில் ஸ்மித் மும்பைக்கு வந்தபோது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆங்கில நடிகர் வில் ஸ்மித் 'கிங் ரிச்சர்டு' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவியைக் கிண்டலடித்த தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது செயலுக்காக நடிகர் வில் ஸ்மித் மன்னிப்புக்கோரினார்.
இதையும் படிக்க | 'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ஷாம்
இதனையடுத்து வில் ஸ்மித் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கர் விழாவில் பங்கேற்க கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தின் வெளியே வில் ஸ்மித் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் இந்தியா வந்ததற்கான காரணம் விரைவில் தெரியவரும்.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு வில் ஸ்மித் 'தி பக் லிஸ்ட்' என்ற நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது சில ஹிந்தி பட நட்சத்திரங்களை அவர் சந்தித்தார்.
Will Smith spotted Mumbai airport today #WillSmith pic.twitter.com/4i5nuZmPZp
â Ê É É È¶ Ê (@Khiladi86) April 23, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்படத்தில் ஏஐ பயன்பாடு... ஆஸ்கர் நாயகன் பிராட் பிட் கூறியதென்ன?

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இலவச ஆன்லைன் படிப்புகள்!

2026 ஆம் ஆண்டின் சிறந்த தொடர் எதிர்நீச்சல் -2!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய லாமிச்சானே நேபாள அணியின் புதிய கேப்டனாக நியமனம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



