சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின. ஏஜெண்ட் கண்ணாயிரம், குளு குளு ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானத்தின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜின் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கிறார் சந்தானம். பார்ச்சூன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சந்தானம் 15 படம் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூரில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இசை - அர்ஜுன் ஜன்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.