திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தாத்தா, அப்பா, மகன் என தலைமுறைகளின் உறவுகளையும் காதலையும் மையப்படுத்திய உருவாக்கப்பட்ட ‘திருச்சிற்றம்பலம்’ தமிழகத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
முதலில் இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.20 கோடி வசூலித்தாகவும், தற்போது ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூலைத் தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வருகிற ஆக - 31 ஆம் தேதி கோப்ரா, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால் இன்னும் 1 வாரத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ திரையரங்குகளில் வசூலைக் குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் தனுஷூடன் நடிகை நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


