சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

‘கோப்ரா’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

நடிகா் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

நடிகா் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமாா் தயாரிப்பில், நடிகா் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆக. 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை அரசு, தனியாருக்குச் சொந்தமான 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1,788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ‘மிகுந்த பொருட்செலவில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தை வெளியிடவுள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரைக் கலைஞா்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வாதிட்டாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.