
பிரபல தமிழ் பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியின் பெயரினை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் காலா படத்தில் பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டாணியில் உருவான மாஸ்டர் படத்தில் உருவான வாத்தி ரெய்டு பாடல் உலகமெங்கும் புகழ் பெற்றது. பிறகு அவரது இசையில் உருவான எஞ்சாமி பாடலும் அவருக்கு புகழினை கொடுத்தது.
சமீபத்தில் இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர் அறிவுக்கும் பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், “பல மைல்கள் ஒன்றாக பயணிப்போம். நாங்கள் பழங்குடிகளின் மூர்க்கமான காதலர்கள். என் திமிரான தமிழச்சி கல்பனா அம்பேத்கர்” என பதிவிட்டு உடன் இருவரது கால்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.